தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் இன்று கடைபிடிக்கப்பட்ட சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, மார்ச் 22

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் சுய ஊரடங்கை பின்பற்றினர்.

நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 9 மணிக்கு நிறைவடைய இருந்த சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *