புதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு ஆணை : முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி.மார்ச்.21

புதுச்சேரியில்  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 22 முதல் 31 வரை ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உமுதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்  மத்திய மாநில அரசுகளால்   தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள்,திரை அரங்குகள்,விடுதிகள்,மதுக்கடை பார்கள், கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளது. மேலும்  எல்லையோர மாவட்டங்களான ஆந்திரா,கேரளா,தமிழ்நாடு  மாநிலங்களில்  கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 22 முதல் 31 ந்  தேதி வரை ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப் படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *