நம் பாதுகாப்பிற்காக வீட்டுற்குள்ளேயே இருந்து கொரோனாவை தடுப்போம்: அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்

சென்னை.மார்ச்.21

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 22ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் 22ந்  தேதி மக்கள் தாமாகவே சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் யாரும் தேவையில்லாமல் வீட்டை வெளியேற வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்   இதனை வலியுறுத்தி  உள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,கிராம ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். மேலும் சுத்தமான கரங்களே சுகாதாரத்தின் வரங்கள் என்ற டிஜிட்டல்  விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடுமுழுவதும் 22ந் தேதி நடைபெறும் சுய ஊரடங்கின் அவசியத்தை வலியுறுத்தி அதுதொடர்பான விழிப்புணர்வு பதிவை உள்ளாட்சித்துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் நம் பாதுகாப்பிற்காக நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, வீட்டுற்குள்ளேயே இருந்து கொரோனா பரவுவதை தடுப்போம். இது நம் உறவுகளின் நன்மைக்காக என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று அமைச்சர் வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *