தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா- நாடுமுழுவதும் 298 பேர் பாதிப்பு



 தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் பொறியாளர் ,டெல்லியிலிருந்து சென்னை வந்த வடமாநில இளைஞர்உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 2பேர்.நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என 3 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாபாதித்தவர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 111 கொரோனா ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது.கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 22ந் தேதி மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *