பிரதமர் அறிவித்துள்ள சுய ஊரடங்கை கடைபிடிப்போம் : ரஜினி,கமல் வேண்டுகோள்

 

சென்னை.மார்ச்.21

 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 22ந் தேதி நாட்டு மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவிப்பை ஏற்று அனைவரும்  வீட்டை விட்டு வெளிய செல்ல வேண்டாம் என ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.‘

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்கு போய்விடக் கூடாது.


வெளியில் பொதுமக்கள் நடமாடும் வேளைகளில் உள்ள கொரோனா வைரஸ் 12 மணி நேரம் முதல் 14 மணி வரை அது பரவாமல் இருந்தாலே, வைரஸ் மூன்றாவது நிலைக்கு போவதை நாம் தடுத்துவிடலாம். இதேபோன்ற வேண்டுகோளை தான் இத்தாலி அரசு அந்த நாட்டு மக்களுக்கு விடுத்தது. ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாததால்தான் இன்று அங்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. அதுபோன்றதொரு நிலைமை இந்தியாவில் வந்துவிடக் கூடாது.

அதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரும் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை பிரதமர் மோடி அவர்கள் கூறியது போல, மனதார பாராட்டுவோம்” என்று 3ரஜினி கோரிக்கை விடுத்துள்ளார். 

முன்னதாக கமல்ஹாசன்  இதுபோன்ற ஒரு வீடியோடிவை வெளியிட்டுள்ளார் அதில், ” கரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது, ஐந்தாவது வாரத்தில் பன்மடங்கு அதிகரிப்பதை பல நாடுகளில் நாம் பார்த்திருப்போம். எதனால்? வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும் சமயத்தில பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சென்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டது 5 பேருனா, அவர்களிடம் இருந்து 25 பேருக்கு பரவும். அது இன்னும் 100 பேருக்கு பரவாம தடுக்க ஒரேஒரு வழி தான் இருக்கு. சோஷியல் டிஸ்டென்ஸ். விலகி இருத்தல். அதீத விழிப்புணர்வு தேவைப்படுகின்ற நான்காவது வாரத்தில் தமிழ்நாடு இருக்கின்றது. கூட்டம் கூடும் இடத்திற்கு செல்வதை அறவே தவிர்த்துவிடுங்க. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுங்கள் என்று கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *