மேட்டூர்-கொள்ளிடம் இடையே 3 தடுப்பணைகள் கட்டப்படும்-முதல்வர்

சேலம், செப்டம்பர்-28

சேலம் மாவட்டம் வீரபாண்டியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சிறப்பு முகாமில் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் என்ன காரணத்திற்காக இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக பதில் கடிதம் அனுப்பப்படும்.


வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சரின் சூரிய மின் ஒளி வசதியுடன் பசுமை வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் குடியிருப்பு திட்டத்தின் கீழ் மானிய நிதி உதவிகள், பயிர்கடன் உதவிகள், சுய உதவி குழுக்களுக்கு உதவிகள் உள்பட பல்வேறு உதவிகள் இவ்விழாவில் வழங்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டை செல்கின்ற இடத்தில் எல்லாம் பேசி வருகிறார்.


நீர்மேலாண்மை திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறிய முதலமைச்சர், மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெங்கு தடுப்பணை கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும், முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும் இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *