தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை : முதல்வருக்கு பிரதமர் பாராட்டு

டெல்லி.மார்ச்.21

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள நாட்டு மக்களின் நலன் கருதி சுய ஊரடங்கு நடவடிக்கை உள்ளிட்ட சில பாதுகாப்பு நெறிமுறைகளை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தார்.22ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வீடுகளிலேயே இருந்து கைகளைத் தட்டி ஊக்கமளிக்க வேண்டுமென பிரதமா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அவரது கோரிக்கையை ஏற்று அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் இயங்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *