10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு: ஏப்ரல் 14க்கு பின்னர் புதிய அட்டவனை

சென்னை.மார்ச்.21

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 14ந் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் தற்போது 9ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 10 வகுப்பு பொதுத்தேர்வு வரும் 27ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை நடப்பதாக இருந்தது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்கவேண்டும், 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சிப்பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் 10ஆம் பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். தமிழ்புத்தாண்டுக்கு பின்னர் புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  முதலமைச்சர் தெரிவித்தார். எனினும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். 

தமிகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் இந்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *