இத்தாலியில் கொரோனாவின் கோரத் தாக்குதல் : கொத்து கொத்தாக ஒரே நாளில் 627 பேர் பலி

ரோம்.மார்ச்.21

இத்தாலியில்  அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு  ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் மனித உயிரை  மாய்க்கும்   அசுரனமாக உலகநாடுகளையே அச்சுறுத்தி வருகிறது.  சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் பரவிய கொரோனா வைரசின்  தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவைவிட 20 மடங்கு குறைவான மக்கள் தொகை   கொண்ட இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 தாண்டியுள்ளது.

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,248 ஆகும்.ஆனால் குறைவான மக்கள் தொகை கொண்ட இத்தாலியில் இதுவரை4,032 பேர் உயிரிழந்துள்ளதால் உலக சுகாதார நிறுவனம் கவலை அடைந்துள்ளது. இத்தாலி மக்களுக்கு போதிய விழிப்புணர்வும் தகுந்த தற்காப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாததே  இந்த பேரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 47 ஆயிரத்து 21 பேருக்கு இத்தாலியில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5986 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . நேற்று ஒரே நாளில்  கொத்து கொத்தாக 627 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *