நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை. மார்ச்.21

நீட்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில்  ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 சட்டப்பேரவையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று  தெரிவித்தார். இந்தக் குழுவில் சுகாதாரத்துறை செயலர்,பள்ளிக்கல்வித்துறை செயலர், கல்வியாளர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவித்தார், ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்று  நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.  நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு ஒரு மாதத்திற்குள் பரிந்துரை அறிக்கையை அரசுக்கு அளிக்கும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *