தினக் கூலி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிதி: உ.பி.அரசு அறிவிப்பு

 

லக்னோ.மார்ச்.21

உத்தரப்பிரதேசத்தில் தினக் கூலி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என அம்மாநில அரசுஅறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்  பரவுவதை  தடுக்க நாடுமுழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 22ந் தேதி சுய ஊரடங்கு கடைபிடிக்க பிரதமர் அறிவுறுத்தி உள்ளால். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில், தினக்கூலி தொழிலாளர்கள் 15 லட்சம் பேர் மற்றும் மாநிலத்தில் உள்ள 20.23 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய தலா ரூ .1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என்று ஆதித்யநாத் கூறினார். கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் போதுமான அளவு  இருப்பதாகவும் கடை உயிமையாளர்கள் பொருட்களை பதுக்கி வைக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *