இந்தியாவில் கொரோனா பாதிப்பு 271 ஆக அதிகரிப்பு

டெல்லி.மார்ச்.21

 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந் பலி வாங்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கூட இந்த வைரசின் பாதிப்பையும், உயிர் பலியையும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூ றி வரும் அமெரிக்காவும், ஜெர்மனியும் இன்னும் அதை வெளியே விடவில்லை. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முதலில் ஒன்று, இரண்டு என்று தொடங்கிய இதன் பாதிப்பு, வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில்வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ராவில் 63  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பாதிஇனி வரும் நாட்களில் இந்நோய் மேலும் வேகமாக பரவும் அபாயம் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *