22ந் தேதி பேருந்து,ரயில், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்: விமான சேவையும் குறைப்பு

சென்னை.மார்ச்.21

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22ந் தேதி நாடுமுழுவதும்  சுய ஊரடங்கு  நபெறுவதையொட்டி தமிழிகத்தில் பேருந்துகள்,ரயில்கள்,மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். அந்த நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 22 அன்று பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் ஓடாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தனியார் பேருந்துகளும் அன்றைய தினம் நிறுத்தப்படுகிறது.

கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கான பேருந்து போக்குவரத்து வரும் 31 ந் தேதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உள்ளுர் விமான சேவையும் வெகுவாக குறைக்கப்படும் என இந்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *