சுய ஊரடங்கு அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும்:தமிழக அரசு


சென்னை.மார்ச்.21

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று தமிழகத்தில் நாளை ஒருநாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

 கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். அந்த நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவுரையை ஏற்று தமிழகத்தில் நாளை ஒருநாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *