22ந் தேதி அம்மா உணவகங்கள் செயல்படும்: சென்னை மாநகராட்சி

 சென்னையில்  மக்கள் 22 ந் தேதி  பொதுமக்கள் நலன் கருதி அம்மா உணவகங்கள் செயல்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் 22ந் தேதி சுய  ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனை ஏற்று தமிழகத்தில் சுய ஊரடங்கை  கடைபிடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில்  பொதுமக்கள் நலன் கருதி  சுய ஊரடங்கு கடைபிடித்தாலும் சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களும் திறக்கப்பட்டு  வழக்கம்போல் உணவுகள் வழங்கப்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் 38 காப்பகங்கள், 13 சிறப்பு காப்பகங்கள் என மொத்தம் 51 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி அன்றைய தினம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர் 51க்கும் மேற்பட்ட காப்பகங்களில் தங்கி பயன்பெற்றுக்கொள்ளலாம். அன்றைய தினம் அவர்களுக்கு மாநகராட்சியின் சார்பாக உணவு வழங்கப்படும். இதுதொடர்பான விவரங்களை மாநகராட்சியின் 1913 அழைப்பு, 044-25303849 மற்றும் 94451 90472 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், www.chennaicorporation.gov.in இணையதளத்தின் காப்பகங்களின் முகவரி மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடற்ற பொதுமக்கள் மாநகராட்சியின் காப்பகங்களில் 22ம் தேதி தங்கி பயன்பெறலாம். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *