கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை : நல்லறம் அறக்கட்டளை சார்பில் தினமும் கிருமி நாசினி தெளிப்பு

கோவை.மார்ச்.20

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நல்லறம் அறக்கட்டளை சார்பில்  அதன் தலைவர் எஸ்.பி.அன்பரசன் அரசுப் பேருந்துகளில் கிருமிநாசினி தெளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தமிழகஅரசு உத்தரவுபடி தொழில் நகரமான கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரின்  வீதிகள் மற்றும் சாலைகளில் இதற்கான விழிப்புணர்வு பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் கோவையில்  பல்வேறு சமூக, கல்வி,ஆன்மிக அறப்பணிகளை  செய்து வரும் நல்லறம் அறக்கட்டளையும்,கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று  பரவாமல் தடுக்கும் வகையில்  பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக,  நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்தார். மேலும் கோவை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நல்லறம் அறக்கட்டளையின் இந்த சமூக விழிப்புணர்வு பணிகளுக்கு  பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பரசன்,  “கொரோனா வைரசில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக நல்லறம் அறக்கட்டளையின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதாக கூறினார். கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் வரை கோவையின் முக்கிய இடங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடரும் என்றும் இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக அரசு கூறியதை போல, மக்கள் அனைவரும் கைகளை நன்கு கழுவ வேண்டும். மேலும், மற்றவர்களிடம் கைகுலுக்கி நன்றி தெரிவிப்பதை தவிர்த்து, நமது பாரம்பரியபடி இருகைகூப்பி வணக்கம் கூறுவது அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று  எஸ்.பி.அன்பரசன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *