சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை : கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரம்

சென்னை.மார்ச்.20

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  200 வார்டுகளிலும் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி  ஊழியர்கள் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதேபோல்  உள்ளாட்சித்துறை சார்பில் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக   15 மண்டலங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிதொடங்கி உள்ளது. இதற்காக புதிதாக கிருமி நாசினி தெளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளன. அத்துடன் தேவையான பணியாளர்களை நியமித்து கூடுதல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சியின்15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கும், கிருமி நாசினி தெளிப்பானுடன், ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று புதிய தெளிப்பான்கள் பணியாளர்களிடம் வழங்கப்பட்டது.

 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதரா நிலையங்கள்,கடற்கரைப்பகுதிகளி,பேருந்து நிலையங்கள், பொது இடங்கள், சந்தைப்பகுதிகள் உள்ளிட்ட  மக்கள் கூடும் இடங்களில் காலை மாலை இருவேளையும் கிரிமிநாசினி தெளிக்கப்படும். இதற்காக அரசு ஒதுக்கிய பேரிடர் நிதியிலிருந்து  பவர் ஸ்பிரேயர் உள்ளிட்ட 500 புதிய எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் டிராக்டர், டாடா ஏஸ் உள்ளிட்ட வாகனங்களில் மூலம் கிருமிநாசினி தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *