கோல நகரமானது, கோவை…

செப்டம்பர்-28

குப்பைத்தொட்டி இல்லாத நகரமாக கோவையை மாற்றுவதில் அம்மாநகராட்சி சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், தெருக்களில் குப்பைகள் கொட்டும் இடத்தில் சுத்தம் செய்து, பூக்கோலமிட்டு மாநகராட்சி ஊழியர்கள் அழகுபடுத்தி வருகிறார்கள்.

https://youtu.be/HRyegYO6CaM

திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க கோவை மாநகராட்சி முழுவதும் சிறிது சிறிதாக குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பொதுமக்களும் குப்பைகளை தொட்டியில் போடாமல், வீசி விட்டு செல்கிறார்கள்.

https://youtu.be/HRyegYO6CaM

இது அந்த தெருக்கள் முழுவதும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் நகரில் எந்தெந்த பகுதிகளில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகிறது என அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது என்றும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

https://youtu.be/HRyegYO6CaM

இதைத் தவிர, குப்பைத்தொட்டிகள் இருந்த பகுதிகள் அனைத்தும், மாட்டுசாணம் போட்டு சுத்தம் செய்து பூவினால் கோலமிடப்படுகிறது. இந்த பணியை கோவை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். குப்பைகளை தெருக்களில் கொட்டுவதை தவிர்த்து துப்புரவு ஊழியர்களே வீடு வீடாக சென்று குப்பைகளை பெற்றுகொள்கின்றனர்.

https://youtu.be/HRyegYO6CaM

சுத்தம் செய்த இடங்களை அப்படியே விட்டுவிடாமல் தினமும் துப்புரவு ஊழியர்கள், அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். கழிவுகளை கொட்டும் இடங்கள் அனைத்தும் தற்போது, கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கிறது.

https://youtu.be/HRyegYO6CaM

கோவை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை அனைத்து மக்களும் பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற மற்ற பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *