சுய ஊரடங்கை கடைபிடிக்க ரஜினி,விஜய்,அஜித்,இளையாராஜாவுக்கு கமல் அழைப்பு

சென்னை.மார்ச்.20

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கை கடைபிடிக்க வாருங்கள் என  ரஜினிகாந்த் ,விஜய்,அஜித்,இளையாராஜா உள்ளிட்டோருக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் 22 ந் தேதி மக்கள் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்  இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பிரதமரின் அழைப்பை ஏற்று சுய ஊரடங்குக்கு முழுமனதுடன் துணை நிற்பேன் என கூறியுள்ளார்.

இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நமக்கு ஏற்படும் பேரழிவை நாம் அனைவரும் உணர்ந்து ஒற்றுமையாக  செயலாற்ற வேண்டும். வீட்டிற்குள்ளும் இருப்பதன் மூலம் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கமல் தெரிவித்துள்ளார். மேலும் தனது நண்பர்கள்,ரசிகர்கள் அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கமல் கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர்கள்,ரஜினிகாந்த்,விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,சிலம்பரசன்,விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் இளையராஜா  ஆகியோருக்கும் சுய ஊரடங்கில் பங்கேற்க வேண்டும் என் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *