பிரதமரின் ஊரடங்கு அறிவிப்பு: அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் வரவேற்புமார்ச்.20

கொரோனா பரவலை தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி 22ந் தேதி நாடுமுழுவதும் ஊரடங்கு என்பதை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று  அறிவித்துள்ளர். பிரதமரின் இந்த அறிவிப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எச்.ராஜா, நடிகை குஷ்பு, மற்றும் சினிமா பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து, பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக உரையாற்றினார். ‛‛கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடுகிறது. இது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. இந்தியா, மிகுந்த மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது. இதை விரட்ட வரும் 22ம் தேதி நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ நடத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ”அன்று காலை 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்” என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் என பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரதமரின் அறிவிப்பை வரவேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் அறிவித்துள்ள ஒரு நாள் மக்கள் ஊரடங்கு வரவேற்கத்தக்க நடவடிக்கை. அவரது அறிவிப்பை மதித்து தனித்திருப்போம்… விழித்திருப்போம்…. இதையே அடுத்த 3 வாரங்களுக்கு வாடிக்கையாக மாற்றிக்கொள்ள முயலுவோம் என்று  கூறியுள்ளார்.

பாஜக தேசிய செயலர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், கொரோணா நோய்த்தொற்றின் தாக்கத்தை முழுமையாக குறைக்க பாரத பிரதமரின் அறிவுரையை ஏற்போம்! வரும் 22 அன்று நாம் சுய ஊரடங்கு முறையில் நமது இல்லங்களிலேயே இருப்போம் கரோணாவை விரட்டுவோம்  என்று கூறியுள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் மகளிர் அணி நிர்வாகியுமான குஷ்பு, வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாகவும் அதற்கு  உடன்படுவதாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற காலங்களில் அரசியல் வேறுபாடுகளை எங்களால் கொண்டு வர முடியாது. இதை எதிர்த்துப் போராட நாம் ஒருவருக்கொருவர் இணைந்து நிற்க வேண்டும். எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, அரசியலும் இல்லை, சமுதாய வேறுபாடும் இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.


அஜய் தேவ்கன் கூறுகையில், சக இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 22ம் தேதி அனைவரையும் வீட்டிலேயே இருக்கும்படி பிரதமர் கேட்டு கொண்டுள்ளார். இதை அனைவரும் உறுதியோடும், கட்டுப்பாடோடும் செய்ய வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷில்பா ஷெட்டி கூறுகையில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை ஏற்று நாம் அனைவரும் சுய கட்டுப்பாட்டை ஒழுக்கத்துடன் கடைபிடிக்க வேண்டும். ஜெய்ஹிந்தி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரித்தேஷ் தேஷ்முக் டுவிட்டரில், மார்ச் 22ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7மணி வரை மக்களே சுய ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும். அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். 60வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலேயே இருக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து போராட நாட்டுக்காக இதை அனைவரும் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
ஹேமமாலினி டுவிட்டரில், பிரதமர் மோடியின் உரை நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக இருந்தது. நாட்டின் மீதான அவரின் தன்னலமற்ற பக்தி மற்றும் கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அவர் மேற்கொள்ளும் திட்டங்களை பார்த்து வணங்குகிறேன். நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றுபட்டு இந்த கொடிய நோயின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவோம் ஜெய்ஹிந்த் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *