கொரோனா எதிரொலி : தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள் 31 ந் தேதி வரை மூடல்

சென்னை.மார்ச்.20

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பக்தர்களின்  வருகை அதிகமாக உள்ள கோயில்கள், தேவலாயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை மார்ச் 31ந் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சென்னையில் மயிலை கபாலீஸ்வரர்கோயில், வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்கள் இன்று நடைசாத்தப்பட்டன. இதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருத்தணி முருகன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் உள்பட அதிக மக்கள் வரக்கூடிய மிகப் பெரிய கோவில்களின் நடையும் இன்று  சாத்தப்பட்டன.  இன்று முதல் 31–ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆகம விதிகளின்படி, கோவில்களில் அன்றாடம் நடைபெறும் அனைத்து கால பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அதிக அளவில் மக்கள் வருகை உள்ள நாகைமாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதாக் கோயில் உள்ளிட்ட பெரிய தேவாலயங்கள் மற்றும் மசூதிகள், தர்காக்களில் 31–ந் தேதி வரை பொதுமக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்ளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *