கோயம்பேடு சந்தை 22ந் தேதி மூடப்படும் என அறிவிப்பு

சென்னை.மார்ச்.20

சென்னை மிகப்பெரிய காய்கனி சந்தையான கோயம்பேடு மார்க்கட் 22ந் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் வணிக நிறுவனங்கள்,வர்த்தக மையங்கள், திரையரங்குகள்,கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசுத் துறைகளில் பணியாற்று பி,சி பணியாளர்கள் உள்ளிட்ட 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இதனை தனியார் நிறுவனங்களும் பின்பற்றி தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே  பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள்,10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை  வீட்டிலேயே இருக்க வேண்டும் அவர்கள்  வெளியில் செல்லக்கூடாது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் வெளிநாட்டு விமானங்கள் இந்தியா  வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22 முதல் 29 வரை இந்த தடை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். 22-ந்தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அறிவித்திருந்தார். ஆனாலும் 22-ந்தேதி அனைத்து கடைகளையும் அடைக்க வியாபார நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

சென்னை மக்களுக்கு தேவையான காய்கறிகளை ‘சப்ளை’ செய்யும் கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுக் கிழமை (22-ந்தேதி) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மார்க்கெட் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறது. பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து மார்க்கெட்டை சுத்தம் செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *