இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு:223 பேர் பாதிப்பு

டெல்லி.மார்ச்.20

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்க 5 ஆக அதிகரித்துள்ளது,நாடு முழுவதும் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, அமெரிக்கா,கனடா,தென்கொரியா ஈரான், ஸ்பெயின் என 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரானா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 9000 க்கும் அதிகமானோர் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிராவில் 44,  கேரளளாவில் 26, ஆந்திரப்பிரதேசம்,உத்தரப்பிரதேசத்தில் 18, டெல்லியில் 16,கர்நாடாகாவில் 15,  தமிழ்நாட்டில் 3 பேர் அனைத்து மாநிலங்களிலும் 223 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வெளிநாட்டினர் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா,டெல்லி,கேரளா,மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், ஜெய்ப்பூரில் சிகிச்சைப்பெற்று வந்த இததாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *