நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலப்பட்டனர் : பெற்றோர்கள் மகிழ்ச்சி


டெல்லி.மார்ச்.20

நிர்பயா குற்றவாளிகளுக்கு            தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவரது பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் திகார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

இந்த வழக்கில் முகேஷ்சிங்,பவன்குப்தா,வினய்சர்மா,அக்ஷயகுமார்சிங் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்ப்டட சீராய்வு மனு, குடியரசுத்தலைவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு தள்ளுபடி நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றாவளிகள் தரப்பில் கடைசி முயற்சியாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் நள்ளிரவு தள்ளுபடி  செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று 4 பேருக்கும் தூக்கு தண்டனை இன்று அதிகாலை நிறேவேற்றப்பட்டது.

இது தொடர்பாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கூறியதாவது, 2012 சம்பவம் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு தாமதமானாலும், நீதி கிடைத்துள்ளது. 7 ஆண்டு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தூக்கு நிறைவேற்றப்பட்டது, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைத்த வெற்றி. நிர்பயாவின் தாயார் என்பதில் பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நிர்பயாவின் தந்தை கூறுகையில், நீதிக்காக போராடியதால் வெற்றி கிடைத்துள்ளது. 2012 சம்பவத்திற்கு பின் நாங்கள் நீதிக்காக போராடினோம். அதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டோம். ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இடையே பெற்றோர் வேறுபாடு காட்டக்கூடாது. 4 பேர் தூக்கில் போடப்பட்டது, போலீசார், மீடியாக்களினால் கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.


இதனிடையே, நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, திஹார் சிறை வாசல் முன் கூடியிருந்த பொது மக்கள், பெண்கள் அமைப்பினர், இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், நாட்டிற்கு ஒரு உதாரணம் எடுத்து காட்டப்பட்டுள்ளது. இதனை முன் கூட்டியே செய்திருக்க வேண்டும். தற்போது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது மக்களுக்கு தெரிந்திருக்கும். தண்டனை தள்ளி போகலாம். ஆனால், நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.
என்றார்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறுகையில் தண்டனையை நிறைவேற்ற 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. நிர்பயாவிற்கு நடந்த கொடூரம் போல் மீண்டும் நடைபெறக்கூடாது என உறுதி எடுத்துகொள்வோம். சமீபகாலம் வரை குற்றவாளிகள் சட்டத்தை தவறாக பயன்படுத்த முயன்றனர். நமது அமைப்பில் சிலகுறைபாடுகள் உள்ளன. அதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *