கொரோனா அச்சுறுத்தல்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருப்பதி.மார்ச்.19

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக  தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதிக்கு வந்த வட இந்திய பக்தருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், திருமலைக்குச் செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. மேலும் திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைபாதை, அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழித்தடங்கள் அனைத்தையும் தேவஸ்தானம் மூடியுள்ளது. திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடியில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் திருமலைக்கு செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். மார்ச் 31 வரை பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என ஆந்திர அரசும் உத்தரவிட்டுள்ளது. 

எனினும் கோயிலை மூடாமல் நாள்தோறும் ஏழுமலையானுக்கு நடைபெறும் பூஜைகள் வழக்கம் போல் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *