முதியோர்,10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி.மார்ச்.19

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்,10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வீட்டிலேயே இருக்கவேண்டும் என   மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரேனா வைரஸ்  பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதனால் நாடு முழுவதும் வணிக நிறுவனங்கள்,வர்த்தக மையங்கள், திரையரங்குகள்,கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு இன்று, மத்திய அரசுத் துறைகளில்பணியாற்று பி,சி பணியாளர்கள் உள்ளிட்ட 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என அறிவித்துள்ளது.   இதனை தனியார் நிறுவனங்களும் பின்பற்றி தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே  பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள்,10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை  வீட்டிலேயே இருக்க வேண்டும் அவர்கள்  வெளியில் செல்லக்கூடாது என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் வெளிநாட்டு விமானங்கள் இந்தியா  வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 முதல் 29 வரை இந்த தடை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *