இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆக உயர்வு

டெல்லி.மார்ச்.19

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்க 4 ஆக அதிகரித்துள்ளது,நாடு முழுவதும் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, அமெரிக்கா,கனடா,தென்கொரியா ஈரான், ஸ்பெயின் என 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரானா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 9000 பேர் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா,  கேரளா,ஆந்திரப்பிரதேசம்,உத்தரப்பிரதேசம்,சட்டீஸ்கர்,ஒடிசா, அரியானாவில்,டெல்லி,கர்நாடாக உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில்  அவசரநிலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியா வந்த வெளிநாட்டினர் 32 பேர் உள்ளிட்ட 180 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா,டெல்லி,கேரளா,மகாராஷ்டிராவில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *