விவசாயிகளுக்கும் தங்குதடையின்றி பயிர்க்கடன் : அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை.மார்ச்.19

தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தங்குதடையின்றி பயிர்க்கடன் வழங்கப்படுகிறது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கூட்டுறவு, உணவுத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சவுந்தரபாண்டியன், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு முறையாக கடன் கொடுப்பதில்லை, குறிப்பிட்டவர்களுக்கு தான் கடன் கொடுக்கிறார்கள். என்று கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ.,

குறிப்பிட்ட பலருக்கு தான் கடன் கொடுக்கிறார்கள என்கிறார். யாருக்கும் அப்படி கொடுக்கப்படவில்லை. 10 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது பிப்ரவரி மாதம் வரை 11 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கி வருகிறோம் என்று அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து திமுக உறுப்பினர் சவுந்தரபாண்டியன் பேசுகையில், இந்த ஆண்டு புதிதாக யாருக்கும் கடன் கொடுக்கவில்லை என்றும், உரத்தட்டுப்பாடு உள்ளது என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு,நான் 10வது ஆண்டாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கிறேன். சரியான தகவல்களை சொல்லுங்கள். எந்த வங்கியில் கடன் கொடுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு சொல்லுங்கள். தங்குதடையின்றி பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. தகுதியான அனைவருக்கும் கடன் வழங்கப்படுகிறது .

1 லட்சத்து 69 ஆயிரம் டன் யூரியா உரம் வழங்கப்பட்டிருக்கிறது. உரத்தட்டுப்பாடு என்பதே இல்லை. அனைவருக்கும் உரம் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *