தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை.மார்ச்.19

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 31ஆம் தேதி வரை மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து விமானநிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் முழு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறை உருவாக்கப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட அறை உருவாக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் தற்போது முழுவதும் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அறிவுறுத்தல்படி அவருக்கு இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த இரண்டிலும் நெகட்டிவ் என்று வந்ததும்தான் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். 14 நாட்கள் அவரை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

டெல்லியிலிருந்து ரயிலில் சென்னைக்கு வந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அயர்லாந்தில் இருந்த கடந்த 17ந் தேதி  தமிழகம் வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாதக அவர் கூறினார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *