கொரோனா விரட்டியடிப்பு : சீன மக்கள் நிம்மதி பெரு மூச்சு…

பெய்ஜீங்.மார்ச்.19

சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது, ஒட்டு மொத்த உலகையும் உலுக்கி எடுத்து வருகிறது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 2.04 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்; 83 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் மட்டும் 80,894 பேர் கொரேனா வைரசால் பாதிக்கப்பட்டு 3,245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் காரணமாக சீனாவே முற்றிலும் முடங்கியது. அதன் பின்னர் அந்நாடு கொண்டு வந்த பல கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளால், வைரஸின் தாக்கம் குறைந்து  இயல்பு  நிலை மெல்ல திரும்பி வருகிறது.

மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள் பலரும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துவிட்டதால், அந்த மருத்துவமனைகள் காலியாக உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும், இருப்பினும் சீன அரசு எச்சரிக்கையாகா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  சீனாவின் தேசிய சுகாதார ஆணைய அதிகாரி மி பெங், கொரோனா வைரசால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களாக, புதிய நோயாளிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இரு மாதங்களுக்கு மேலாக ஹூபே மருத்துவமனைகளில் வேலை செய்த பணியாளர்கள் தற்போது வீடு திரும்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

அதே சமயம் 34 பேர் புதிததாக கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வந்தவர்கள், சீனாவில் அதாவது உள்ளூரில் எந்த ஒரு புதிதாக வழக்குகளும் இல்லை என அவர் தெரிவித்தார்.

கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்த நாடுகளில் சீனாவும் ஒன்று, தற்போது அந்நாட்டில் இது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் இந்த செய்தியை மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *