கொரோனாவை தடுக்க அரசோடு ஒத்துழைப்போம்: ரஜினி

சென்னை.மார்ச்.19

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர்  பதிவில் கூறியிருப்பதாவது.,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்னை நடவடிக்ககைள் மிகவும் பாராட்டத்ததக்கவை, அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால்,அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பத என் தாழ்மையான வேண்டுகோள் என ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *