தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்

டெல்லி.மார்ச்.19

தமிழகத்தில் ஏப்ரல்  1 முதல்  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்  நடைமுறைப் படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரே‌சன் கார்டு திட்டம்  ஜூன் மாதம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலும் ஒரே நாடு ஒரே ரே‌சன் கார்டு திட்டம்,முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.இதன்படி இந்த இரண்டு மாவட்டத்திலும் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்த நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க முடியும்.

இந்நிலையில்  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல்  1 முதல்  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்  நடைமுறைப் படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள  எந்த நியாய விலைக் கடைகளிலும்  குடும்ப அட்டை தாரர்கள் பொருட்களை வாங்கி  கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 60 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 99 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *