கொரோனாவுக்கு இந்தியா அதிக விலை கொடுக்க நேரிடும்: ராகுல் எச்சரிக்கை

டெல்லி.மார்ச்.19

கொரோனா வைரசை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா அதிக விலை கொடுக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை  151ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனாவை தடுக்க மத்தியஅரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இன்னும் அதிக வேகத்துடன் செயலாற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா வைரஸ் தாக்குதலை திறம்பட எதிர்கொள்ள, உடனடியான அதிரடி நடவடிக்கைகள் தேவை. இந்த பிரச்சனையில் தீர்க்கமாக செயல்பட, மத்திய அரசு தவறியதற்கு, நம் நாடு, மிக அதிக விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

ஏற்னவே கொரோனா பிரச்னைக்கு இந்தியா சரியான நடவடிக்கையை எடுக்காவிட்டால் இந்தியப் பொருளாதாரம் அழிந்துவிடும் என ராகுல் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *