கொரோனாவால் தமிழகத்தில் சிறுகுறுந் தொழில்களுக்கு பாதிப்பில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில்

 

சென்னை.மார்ச்.19

சட்டப்பேரவையில் திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் கொரோனாவால் தமிழகத்தில் சிறுகுறுந் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த வெளிநாடுகளில் வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குவது போல், தமிழக சிறு குறு வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை தமிழக அரசு சரிசெய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.சி.வீரமணி  தமிழகத்தில் தடையின்றி  சிறு குறு வணிகம் நடைபெற்று வருகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறு குறு கடைகள் தமிழகத்தில் எங்கும் மூடப்படவில்லை அவர்கள் தொடர்ந்து  எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் தொடர்ந்து தொழிலை நடத்த எந்த தடையும் இல்லை என்று முதலமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *