தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

 சென்னை.மார்ச்.19

தனியார் மருத்துவமனைகளில் கொரோன சிகிச்கைக்கு சிறப்பு வார்டுகள் அமைக்க  உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 சட்டப்பேரவையில் எதிர்கட்சித்துணைத் தலைவர் துரை முருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் கொரோனா அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 32 பேருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காண்கணிக்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளில் கொரானா சிறப்பு வார்டுகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில்  அங்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும் கொரோனா வைரஸ் பரிசோதனையை தனியார் மருத்துவ மனைகளில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் கொரானா வைரஸ் பரிசோதனை அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னும்  ஓரிரு நாட்களில் கொரோனா  பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *