கொரோனா அச்சுறுத்தல் 210 ரயில் சேவைகள் ரத்து

சென்னை.மார்ச்.19

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, பயணிகள் எண்ணிக்கை  வெகுவாக குறைந்துள்ளதைதையடுத்து, சென்னை-மதுரைக்கு இடையயோன  துரந்தோ விரைவு ரயில் உள்பட 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் 210-க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரயில்வே நிா்வாகம் சார்பில்ர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தேவையில்லாத பயணத்தை தவிா்க்க மத்திய மாநில  அரசுகள் அறிவுறுத்தியுள்ளதால், ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது. இதனால், ரயில்களின் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, பல ரயில்களில் இருக்கைகள் காலியாகியுள்ளன. இதையடுத்து, 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் 210-க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்

சென்னை சென்ட்ரல்-மதுரை இயக்கப்படும் ஏசி துரந்தோ விரைவு ரயில் சேவை மாா்ச் 23, 25, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை-சென்னை சென்ட்ரலுக்கு மாா்ச் 24, 26, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ஏசி துரந்தோ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே மாா்ச் 20, 24, 27, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ஏசி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரலுக்கு இடையே மாா்ச் 22, 25, 29, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ஏசி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூரு சென்ட்ரல்-மட்கான் சென்ட்ரலுக்கு மாா்ச் 19-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மட்கான்-மங்களூருக்கு மாா்ச் 19-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்-செகந்திரபாத்துக்கு மாா்ச் 20, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. செகந்திரபாத்-சென்னை சென்ட்ரலுக்கு மாா்ச் 21, 23 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது . எா்ணாகுளம் சந்திப்பு-வேளாங்கண்ணிக்கு மாா்ச் 21-ஆம்தேதி இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது . இதுபோல, வேளாங்கண்ணி-எா்ணாகுளத்துக்கு மாா்ச் 22-ஆம் தேதி இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்த்ரகாச்சி-சென்னை சென்ட்ரலுக்கு மாா்ச் 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சுவிதா வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-சந்த்ரகாசிக்கு மாா்ச் 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு மாா்ச் 19-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் விரைவுரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -திருப்பதிக்கு மாா்ச் 19ஆம்தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி-தூத்துக்குடி, திருநெல்வேலி-திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பாசஞ்சா் ரயில்களின் தலா 13 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *