மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முக்கிய கோரிக்கை

புதுடெல்லி ஆக 26 :

தமிழகத்திற்கான செயலாக்க மானியம் மற்றும் அடிப்படை மானிய தொகை மொத்தம் ரூ.4,977 கோடியை விடுவிக்குமாறு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வலியுறுத்தினார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பான மனுவை அவர் வழங்கினார்.அதில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்துக்கான ரூ.1,196.27 கோடி செயலாக்க மானியத்தை விடுவிக்குமாறு கோரினார்.

மேலும், ரூ.3,780.81 கோடி அடிப்படை மானிய தொகையையும் விடுவிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

இதைத்தொடரந்து கோவையில் இருந்து டெல்லிக்கு தினசரி பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும், மும்பை – பெங்களூரு இண்டஸ்டிரியல் காரிடாரை கோயம்புத்தூர் வரை விரிவுபடுத்தக் கோரியும் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் வேலுமணி மனு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *