சென்னையில் மேலும் கொரோனா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

 

சென்னை.மார்ச்.18

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சென்னை வந்த  இளைஞருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோன வைரஸ்  தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார். ரயில் மூலம்  சென்னைக்கு வந்த 20 வயது டெல்லி இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு    தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் வந்தவர்கள் யார், அவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 2,984 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளார்  சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்   செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *