தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி

சென்னை.மார்ச்.18

தமிழகத்தில்  சாலை விபத்துகளால் ஏற்படும்  உயிரிழப்புகள் கடந்த ஆண்டுகளை விட குறைந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில்  பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசினார். அப்போது கடலூர் மாவட்டம்  விருத்தாச்சலம் – பரங்கிப்பேட்டை இடையே சாலை மேம்பாடு செய்யும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறை (PPP) திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – திருப்பூர் இடையே 70 கி.மீ  சாலை பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 2 பணிகள் ஒப்பந்த நிலையில் உள்ளதாக கூறினார்.

சென்னை கன்னியாகுமரி தொழிற் தடதிட்டத்தில், ரூ.6448 கோடி மதிப்பில் மேற் 590 கி.மீ  நீளத்திற்கு 15 மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாடு செய்யப்படவுள்ளது. இதில் ரூ.4384 கோடி மதிப்பில் கட்டுமானபணிகள் மற்றும் ரூ.1,574 கோடி மதிப்பில் 463 ஹெக்டேர் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 2017 ஆம் ஆண்டை விட 24% குறைந்துள்ளது. தமிழக அரசால் சாலை பாதுகாப்பிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் பாராட்டப்பட்டு, அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *