புதுச்சேரியில் மார்ச் 31 வரை மதுபான பார்கள் மூடல் : முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி.மார்ச்.18

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் மார்ச் 31 வரை மதுபான பார்கள் மூடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 வரை மதுபான பார்கள் மூடப்படும் என்று நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.மது வினியோகத்துடன் கூடிய உணவகங்களும் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும். மேலும் மதுபான மொத்த கொள்முதல் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *