மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

சென்னை.மார்ச்.18

 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த  6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழகத்தில் 6 பேர் உள்ளிட்ட 55 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் காலியாகும் 6 புதிய உறுப்பினர் பதவிக்கு   அ.தி.மு.க. சார்பில், தம்பி துரை, கே.பி.முனுசாமி   கூட்டணிக் கட்சியை சேர்ந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. சார்பில், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து  வேட்பு மனுக்களின் பரிசீலனையில்  அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த  3 பேர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

 இந்நிலையில் வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கு கடைசி நாளான இன்று  அதிமுக சார்பில் போட்டியிட்ட கேபி முனுசாமி, தம்பிதுரை, ஜி கே வாசன் மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட திருச்சி சிவா அந்தியூர் செல்வராஜ் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதனை அடுத்து திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான மூன்று பேரும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் அதிகாரியிடம் இருந்து சான்றுகளை பெற்றக்கொண்ணடனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *