பொதுஇடங்களில் நடமாட வேண்டாம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

 

சென்னை.மார்ச்.18

கொரானா வைரஸ் பரவிவருவதால்  பொது மக்கள் பயணங்களை தவிர்ப்பதோடு பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் என சுகாதாரதுறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துத்துறை பணிமனையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைப்பணிகளை ஆய்வு செய்தனர்..

பின்னர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியளார்களிடம் பேசியதாவது,வெளி மாநிலங்களில் இருந்து சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் வரும் ரெயில் பயணிகளை ரெயில்வே துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கண்காணிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பூங்கா, சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும்.

மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பொது மக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அதிகம் பயணம் செய்வதால் பேருந்துகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில் அனைத்து பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி உடையப் பேருந்துகளிர் திரை சீலைகள், இருக்கை உறைகள் அகற்றப்பட்டுள்ளது. கோவில் உள்ளிட்ட விழாக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் உயர் அலுவலர்கள் சென்று இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *