இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்வு

டெல்லி,மார்ச்.18

 நாடு முழுவதும் 147 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, அமெரிக்கா,கனடா,தென்கொரியா ஈரான், ஸ்பெயின் என 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரானா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கேரளா மாநிலத்தில் முதன்முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.

மகாராஷ்டிரா38 , கேரளா 25 , அரியானாவில் 2 பேர் உள்ளிட்ட 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் டெல்லியில் தலா 11 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, காஷ்மீர், லடாக், தமிழ்நாடு, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 14 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா வந்த வெளிநாட்டினர் 14 பேர் கெரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இநதியாவில் இதுவரை 3 பேர் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்ட 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ராணுவ வீரர் பாதிப்பு

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ராணுவ வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

34 வயதான அந்த வீரர் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் உள்ள சுகாட் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உள்ளது. அவர் ஈரானில் இருந்து பிப்ரவரி 20ம்தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பினார். பிப்ரவரி 29-ம் தேதி முதல் லடாக்கில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

பிப்ரவரி 25ம் தேதி விடுப்பில் சென்ற ராணுவ வீரர், சொந்த ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தார். மார்ச் 2ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மார்ச் 7-ம் தேதி முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது மார்ச் 16-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.என்.எம். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரது சகோதரி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *