வனப்பாதுகாப்பில் இந்தியாவுக்கே தமிழகம் தான் முன்னோடி

கோவை, செப்டம்பர்-27

வனப்பாதுகாப்பில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தில் பயிற்சியை நிறைவு வனக்காப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியை நிறைவு செய்த 595 வனக்காப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக, பயிற்சி பெற்ற காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் பழனிசாமி ஏற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 1865-ம் ஆண்டு முதல் வனங்கள் அரசுடமை ஆக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனங்களை பாதுகாக்கப்படவேண்டும் என்பது தான் அரசின் முக்கிய நோக்கம். 2018-ம் ஆண்டு தமிழகத்திற்கு என தனியாக வனக்கொள்கை வெளியிட்டது வராலாற்று சாதனை.

வனப்பாதுகாப்பு மற்றும் வன விரிவாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சியை நிறைவு செய்த 595 காவலர்களில் 190 காவலர்கள் பெண்கள் என்பது மிகவும் பெருமையடைய செய்கிறது. மரம் நடும் திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்பை பொறுத்தவரை இந்தியாவுக்கே தமிழகம் தான் முன்னோடியாக விளங்குகிறது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *