கடலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு மேல் பணியாற்றும் கடைகளை மூட உத்தரவு

  

கடலூர்.மார்ச்.18

கடலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு அதிகமானவர்கள் பணியாற்றும் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக  முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள்,திரையரங்குகள்,வணிக நிறுவனங்கள், மால்கள்,கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், மூடப்பட்டுள்ளன, வெள்ளிகடற்கரைக்கு மக்கள் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும்  பரிசோதனைக்குப் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக மாவட்டம்  முழவதும்  10 அல்லது 10க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பால்,மருந்துகள்,உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகளை 31 ந்தேதி வரை மூடவேண்டும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *