கொரொனாவால் வெறிச்சோடிய தி.நகர் : அனைத்து கடைகளும் மூடல்

 

சென்னை.மார்ச்.18

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில்  அதிக மக்கள் கூடும்   இடங்கள்,திரைஅரங்குகள்,வர்த்தக நிறுவனங்கள்,மால்கள், கல்விநிறுவனங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்த சென்னையில்  மக்கள் அதிகம் கூடும் பூங்காக்கள், திரையரங்குகளை மூட மாநகராட்சி அறிவுறுத்தியது. புரசைவாக்கத்தில் சரவணாஸ்டோர் உள்ளிட்ட கடைகள் நேற்று மூடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சென்னையின் முக்கிய சந்தைப்பகுதியான தியாகராய நகரில், ரங்கநாதன் தெரு, உஸ்மான்சாலையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டன. வரும் 31ந் தேதி வரை கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கடைகள் மூடப்பட்ட ரங்கநாதன் தெரு,நடேசன்தெரு,உஸ்மான்சாலைகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எப்பொழுதும் பரபரப்பாக மக்கள் கூட்டம் நிறைந்து வழியும் தியாகராய நகர் தற்பொழுது வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *