கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் மூடல்

ஜெயங்கொண்டம்.மார்ச்.18

கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள  பெருவுடையார் கோயில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மார்ச்.31ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் மகன் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோவில் உள்ளது.  ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு அனைத்து நாட்களிலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த கோவிலில் பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆகமவிதிகளின்படி கோவிலில் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெறும். வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *