நாடு திரும்ப முடியாமல் மலேசியாவில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை

டெல்லி.மார்ச்.18

நாடு திரும்ப முடியாமல்  மலேசிய விமான நிலையத்தில் தவித்து வரும் ம் தமிழகத்தைச் சேர்ந்த 180 பேர் உள்ளிட்ட 250 இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்சில் மருத்துவம் பயின்று வரும் 250 இந்திய மாணவர்கள் அங்கிருந்து  மலேசியா வழியாக தாயகம் திரும்ப முடிவு செய்து புறப்பட்டனர். 3 விமானங்களில் நேற்று  மலேசியா வந்தடைந்த மாணவர்கள், கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். விமான சேவை நிறுத்தப்பட்டதால்  அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல்  தவித்து வருகின்றனர். இதில் 180 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் மாணவர்களை  மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்திய மாணவர்களை   மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *