கோவையில் இருந்து கேரளா செல்லும் பேரூந்துகள் நிறுத்தம்: சென்னையில் 62 விமானங்கள் ரத்து

கோவை.மார்ச்.17

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோயமுத்தூரில் இருந்து கேரளா செல்லும் 45 பேரூந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது,சென்னையில் 62 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக தேவையில்லாத பயணத்தை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய மாநில  அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. இதனால், ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில்  புரசைவாக்கம்,தியாகராய நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதியில் உள்ள பெரிய கடைகள் ,திரைஅரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, சென்னையில் இருந்து கிளம்பும் சர்வதேச விமானங்கள் 46, உள்நாட்டு விமானங்கள் 16 என மொத்தம் 62 விமான சேவை ரத்து செய்யப்பட்டது.  கேரளாவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவையில் இருந்து கேரளா செல்லும் 45 பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது. மேலும், பயணிகளின் வருகை குறைவு காரணமாக, கோவை, பொள்ளாச்சியில் 168 பேருந்துகளின் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *