கொரோனா முன்னெச்சரிக்கை: திருச்சியில் பூங்காக்கள் அனைத்தும் மூடல்

திருச்சி.மார்ச்.17

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக  திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவின்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், மால்கள், வணிக மூடப்பட்டு வருகின்றன..

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மணியின் உத்தரவின் பேரில் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சிக்குள்பட்டு திருவரங்கம், பொன்மலை, கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம் என 4 கோட்டங்களில் நடைபயிற்சி பூங்கா, சிறுவர் விளையாட்டு பூங்கா, அறிவியல் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, பசுமை பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி மையத்துடன் கூடிய பூங்கா என பல்வேறு நிலைகளில் 100-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் அனைத்தும் புதன்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா வரைஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவின்படி மறு உத்தரவு வரும் வர பூங்காக்கள் மூடப்படுகின்றன. அனுமதியின்றி உள் நுழைய முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *